ஒழுங்கற்ற பழக்கங்கள் உங்கள் தலைமுடியை சேதப்படுத்தலாம் அல்லது உச்சந்தலையில் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதனால் முடி உடையும், சுருண்டு போவது, வளர்ச்சி குறைவது போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். அதனைத் தவிர்க்க சரியான வழியை தெரிந்து கொள்ள வேண்டும்.

கூந்தல் நீளமாகவும் மெல்லியதாகவும் இருந்தால், இரவு முழுவதும் சிக்காமல் தளர்வான ஜடைகளில் தூங்குவது சிறந்தது. இது உச்சந்தலையில் அழுத்தத்தை குறைத்து, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. குறுகிய கூந்தலுக்கு அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் அவ்வாறு தூங்குவதால் சிக்கல் குறையும்.
முடியை கட்டுவதற்கு ரப்பர் பேண்டுகளுக்கு பதிலாக சில்க் ஸ்க்ரஞ்சிகள் பயன்படுத்தவும். பருத்தி தலையணைக்குப் பதிலாக சில்க் தலையணை உறையைப் பயன்படுத்துவது முடி உராய்வைக் குறைக்கும். முடியை ஒரே இடத்தில் கட்டாமல், தினசரி இடத்தை மாற்றுங்கள். அவ்வப்போது தளர்வான ஹேர் பாண்டை அணியுங்கள்.
முடி ஈரமாக இருக்கும்போது அது மிகவும் பலவீனமாக இருக்கும். ஆகையால் ஈரமான முடியுடன் தூங்குவது தவிர்க்கப்பட வேண்டும். ஈரமான முடி கட்டுவது பூஞ்சை மற்றும் உதிர்தல் அபாயத்தை அதிகரிக்கும். இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் முடி ஆரோக்கியமாக வளரக்கூடும்.