சென்னை: சில அருமையான சமையலறை டிப்ஸ்… தக்காளி சாஸ் செய்யும் போது, அதில் ஐந்து பல் வெள்ளை பூண்டையும் மைபோல் அரைத்து சேர்த்துக் கொண்டால் சுவை அதிகரிக்கும். அஜீரணம் வராமல் காக்கும்.
மாதுளம் பிஞ்சை தயிருடன் சேர்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் ரத்த பேதி குணமாகும். கசகசாவுடன் சிறிது கருப்பட்டி நாலு கிராம்பு சேர்த்து பொடித்து 3 வேளை சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.
தேங்காய் வழுக்கையுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச் சூடு தணியும். வெந்தயத்துடன் நான்கு கிராம்புகளை வைத்து, சிறிது நீர் தெளித்து, மை போல அரைத்து, தலையில் பூசி அரைமணி நேரத்திற்கு பிறகு குளித்தால், பொடுகு தொல்லை ஈர்கள் அழியும்.
ஆரஞ்சு பழத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொண்டால் குடலில் தீமை செய்யும் பூச்சிகள் உண்டாகாது.
வெள்ளைப் பூண்டுடன் சிறிது துளசி சாறு சேர்த்து அரைத்து தேமல் மேல் பூசி வந்தால் தேமல் மறையும். வெங்காய ரசத்தையும் எலுமிச்ச பழ ரசத்தையும் சம அளவில் கலந்து காலரா நோயாளிகளுக்கு கொடுத்து வந்தால், வாந்தி பேதி நின்றுவிடும்.
கறிவேப்பிலை கரிசலாங்கண்ணி கீழாநெல்லி போன்றவைகளின் சாறு கலந்து காய்ச்சிய எண்ணெய் தடவி வர இளநரை மாறும். வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலி இருக்காது.