சென்னை; நமது முழு உடல் தோற்றத்தில் முகம்தான் பிரதானம். முகத்தை அழகாகவும் பொலிவாகவும் வைத்துக் கொள்ளவே நாம் அனைவரும் விரும்புகிறோம். அதற்கான எளிய வழிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
கற்றாழை சோற்றை முகத்தில் தடவி மசாஜ் செய்து, காய வைத்த பின் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
தேன் மற்றும் தயிரைக் கலந்து முகத்தில் பூசுவதால் அது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து மென்மையாக்குகிறது. அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் பூசிக்குளிக்கும்போது வேர்க்குரு நீங்கி உடல் பளபளப்பு அடையும். முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.
தயிரை முகத்தில் பூசி சிறிது நேரம் மசாஜ் செய்வதால் முகத்தில் தங்கியுள்ள அழுக்குகள் நீங்கி முகம் பொலிவுறும். தயிரிலுள்ள சில வேதிப்பொருட்கள் மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துவதால் முகத்தின் சிவப்பழகு கூடும். எலுமிச்சை சாறுடன் சம அளவு தேன் சேர்த்து நன்றாக கலக்கி முகத்தில் தடவலாம்.
பின்னர் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் எண்ணெய் வடிதல் இருக்காது. மேலும், தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையும். பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் பொலிவுறும்.