அன்றாட வாழ்க்கையில் சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும் என்பது ஒரு மிக முக்கியமான விஷயம். குறிப்பாக குப்பைத் தொட்டி வைக்கப்படும் இடத்தில் சிறிதளவும் கவனம் தளர்ந்தால், துர்நாற்றம் வீடு முழுவதும் பரவும். இது ஒவ்வொருவரையும் தொந்தரவு செய்யக்கூடியது. சமையல் குப்பைகள் பலவகையான ஈரப்பதத்தையும், கெட்ட மணத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. எனவே துர்நாற்றத்தை தடுக்கும் சில எளிய வழிகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில், தினமும் குப்பையை அகற்றி, குப்பைத் தொட்டியை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். ஈரமான காய்கறி தோல்கள், தேயிலை இலைகள் போன்றவை ஒரு நாளுக்கும் மேலாக இருக்கும்போது, துர்நாற்றம் பரவத் தொடங்கும். வாரத்திற்கு ஒருமுறையாவது குப்பைத் தொட்டியை வெதுவெதுப்பான நீர், சிறிது வினிகர், பாத்திர கழுவும் திரவம் சேர்த்து நன்றாக கழுவி வைத்தால் கிருமிகள் பரவாமல் இருக்கும்.
அடுத்து, குப்பையின் அடிப்பகுதியில் பழைய செய்தித்தாள் அல்லது காகிதம் பரப்புவது நல்லது. இது ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் துர்நாற்றத்தை தடுக்கும். புதிய குப்பையைப் போடும்போது, 1-2 தேக்கரண்டி பேக்கிங் சோடாவை தெளித்துவிட்டால், துர்நாற்றம் பரவுவதை கட்டுப்படுத்தலாம். மேலும், பேக்கிங் சோடா ஈரப்பதத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.
எலுமிச்சை தோல், லாவெண்டர், தேயிலை மரம் போன்ற நறுமண எண்ணெய்களை காகிதத்தில் தெளித்து குப்பை தொட்டியின் மூடியின் உள்ளே வைக்கலாம். இது துர்நாற்றத்தை குறைக்கும். ஒரு காகிதத்தில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் விட்டால் மெதுவாக நறுமணத்தை பரப்பும். கூடவே, நறுக்கிய எலுமிச்சையின் மீது சிறிது உப்பும் சோடாவும் சேர்த்து வைக்கலாம். இது காற்றை சுத்தம் செய்து ஒரு இயற்கை வாசனையை பரப்பும்.
இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், சமையலறை எப்போதும் நறுமணத்துடன், சுத்தமாக இருக்கலாம். உங்கள் வீட்டு சூழல் சுகாதாரமானதும், ஆரோக்கியமானதும் இருக்கும்.