பெண்கள் ஆன்லைன் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.
பெண்கள் ஆன்லைனில் ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இங்கிலாந்தின் ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் பல நடவடிக்கைகளை எடுத்தாலும், பெண்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை.
ஆண்களை விட பெண்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகளை அதிகம் பின்பற்றுகின்றனர். ஆனால், தங்களுக்கேற்ற ஆன்லைன் பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவதில் குறைவாக உள்ளனர்.
ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்தும் வழிகள்
- சமூக ஆதரவை அதிகரித்தல்
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் அமைப்புகளின் உதவியை பெறுதல் முக்கியம். - எளிதாக அணுகக்கூடிய ஆலோசனை
அடிப்படைத் திறன்கள் இல்லாதவர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் ஆலோசனையை வடிவமைக்க வேண்டும். - பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட சூழ்நிலைகளுக்கு தீர்வு
பெண்கள் அனுபவிக்கும் சிக்கல்களுக்கு ஏற்ற ஆலோசனைகளை வலைத்தளங்கள் பரவலாக பகிர வேண்டும். - பாதுகாப்பான இடங்களை உருவாக்குதல்
பெண்களுக்கு ஆதரவாக சமூக இடங்களை உருவாக்குவது முக்கியம். - சரியான டிஜிட்டல் திறன்களை அளித்தல்
பெண்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு திறன்களை வளர்க்க பயிற்சி வகுப்புகள் அளிக்க வேண்டும். - புதிய தொழில்நுட்பங்களின் அபாயத்தை மதிப்பீடு செய்யுங்கள்
தொழில்நுட்ப உருவாக்கத்தின் முன், அதன் தாக்கத்தை ஆராய வேண்டும்.
ஆன்லைன் பாதுகாப்பை உறுதிசெய்யும் இந்த பரிந்துரைகள், பெண்களுக்கான இணைய அனுபவத்தை பாதுகாப்பானதாக மாற்றும்.