30 வயதுக்குப் பிறகு, பலர் தோலில் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், தொங்கும் சருமம் மற்றும் பொலிவிழந்த தோற்றம் போன்ற வயதான அறிகுறிகள் காணப்படுபடுகிறது. இந்த மாற்றங்கள் உடலில் நடைபெறும் மரபணு மற்றும் செல்லுலார் மாற்றங்களின் விளைவாகவே அல்ல.
வெளிப்புற காரணிகள், சூரிய ஒளி, மாசுபாடு மற்றும் நச்சுகள் ஆகியவற்றின் விளைவாகவும் ஏற்படுகின்றன. வயதான செயல்முறை இயற்கையானது. ஆனால் சருமத்தை இளமையாக வைத்திருக்க சில நடவடிக்கைகளை நாம் எடுக்கலாம்.
ஆரோக்கியமான உணவு, போதுமான தண்ணீர், மற்றும் நல்ல உறக்கம் ஆகியவை சரும பராமரிப்புக்கு முக்கியமானவை. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினசரி செய்ய வேண்டிய முக்கிய நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்வோம். ஆரோக்கியமான உணவை பின்பற்றுவது முக்கியம்.
ஏனெனில் ஊட்டச்சத்து மற்றும் சரும ஆரோக்கியம் நேரடி தொடர்பு கொண்டவை. சாப்பிடும் உணவு தோலில் பெரிதும் தாக்கம் ஏற்படுத்துகிறது, குறிப்பாக வைட்டமின் E போன்றவை வயதான செயல்முறையை மெதுவாக்க உதவுகின்றன.
எனவே, உங்கள் உணவில் வைட்டமின் E, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் C, புரோட்டின் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். இது உங்கள் சருமத்திற்கு ஆன்டி ஏஜிங் பண்புகளை வழங்கும்.