இன்று கூந்தல் பராமரிப்பில் எண்ணெய் தேய்ப்பது ஒரு இயல்பு நடைமுறையாக உள்ளது. குறிப்பாக இரவில் எண்ணெய் தேய்த்து தூங்குவது பலருக்கும் வழக்கமாகி விட்டது. இணையத்தில் இதன் நன்மைகளைப் பற்றி பல ஆலோசனைகள், வீடியோக்கள், கட்டுரைகள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால், இது உண்மையில் எத்தனை பேருக்கு பயனளிக்கிறது? அனைவருக்கும் ஏற்றதாக இருக்குமா? என்பது ஒரு கேள்வியாகவே உள்ளது.

பெரும்பாலான நிபுணர்கள், உங்கள் உச்சந்தலைப் பொருத்து எண்ணெய் தேய்ப்பது பாதுகாப்பானது என கூறுகிறார்கள். நீண்ட நேரம் எண்ணெயை முடியில் விடுவது ஊட்டச்சத்தைக் கொடுக்க உதவலாம். ஆனால், இது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக வேலை செய்யாது. குறிப்பாக, எண்ணெய் பசையுள்ள அல்லது மிகவும் மென்மையான கூந்தல் உள்ளவர்களுக்கு, இது எதிர்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எண்ணெய் மேலதிகமாக படிந்து முடியை ஒட்டச் செய்யலாம், தலை தோலில் துளைகள் அடையக்கூடும்.
மாறாக, உலர்ந்த அல்லது உடையும் தன்மையுள்ள கூந்தல் கொண்டவர்கள் இந்த முறையில் அதிக நன்மையைப் பெற முடியும். இவர்கள் வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை எண்ணெய் தேய்ப்பது நல்லது. ஆனால், எண்ணெய் பசையுள்ளவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை போதுமானது. மறுநாள் காலையில் ஷாம்பு மூலம் நன்றாக கழுவுவதால் முடியில் எஞ்சிய எண்ணெய் அகலும், உச்சந்தலை சுத்தமாக வைத்திருக்க முடியும்.
எண்ணெய் எவ்வளவு இயற்கையாக இருந்தாலும், அது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. ஆகவே புதிய எண்ணெய் பயன்படுத்தும் முன் ‘பேட்ச் டெஸ்ட்’ செய்வது மிகவும் அவசியமானது. சிலருக்கு தோலில் அரிப்பு, சிவப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படலாம். இது ஏற்பட்டால் உடனடியாக எண்ணெய் பயன்பாட்டை நிறுத்த வேண்டும். முடி பராமரிப்பில் பொறுமையும், ஒவ்வொருவருக்கும் ஏற்ப தொன்மையுடன் அணுகுவதும் முக்கியமானவை. சரியான முறையில் பின்பற்றப்பட்டால், இரவில் எண்ணெய் தேய்ப்பது உங்கள் கூந்தலுக்கு நல்ல பராமரிப்பு முறையாக அமையும்.