சென்னை: இயற்கையாக முடி கருமையாக மாற சில யோசனைகள் உங்களுக்காக.
எவ்வளவு அழகாக இருந்தாலும் முடி வெள்ளையாக மாறி விட்டால் சின்ன வயசு உள்ளவர்கள் கூட வயதான பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்க தொடக்கி விடுவார்கள்.
நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை அடையாளம்.
எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும். வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு தேவையான போஷாக்கினை வழங்கி முடியை கருமையாக்க உதவும்.
வெங்காய சாற்றினை தலையில் உற வைத்து பின்பு ஷாம்போ கொண்டு கழுவ வேண்டும். இது தலையில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் போஷாக்கினையும் வழங்குகின்றது. இதனை தினமும் செய்தால் தான் சிறந்த பலனை பெற முடியும். உணவிலும் அதிகளவு வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இளநரை மற்றும் முடியை கருமையாக்க சிறந்த இயற்கை பொருள் கறிவேப்பிலை ஆகும். கறிவேப்பிலையை உலர வைத்து பொடியாக்கி தலையில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் இளநரை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.