
முகம் பார்க்கும் கண்ணாடி வீட்டில் பலருக்கும் தினசரி பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஒன்று. அந்த கண்ணாடி சுத்தமாகவும் பளபளப்பாகவும் இருந்தால், அதை பார்த்ததும் நம் தோற்றமும் பிரகாசமாக தெரியும். கண்ணாடியில் பளிச்சென்று பார்வை வருவதற்காக, அதனை எளிய வழிகளில் சுத்தம் செய்யலாம்.
பளபளப்பான கண்ணாடிக்கான முதல் வழி பல் துலக்கும் பேஸ்ட் பயன்படுத்துவதாகும். பேஸ்டில் சிறிது தண்ணீர் கலந்து துணியால் தேய்த்து, பின் நியூஸ் பேப்பர் கொண்டு துடைத்தால் பழைய கறைகள் எல்லாம் மாயமாகி விடும். அதேபோல், வினிகர் மற்றும் தண்ணீர் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைத்து நன்கு துடைத்தாலும் ஜொலிக்கும்.
வினிகருக்கு மாற்றாக டால்கம் பவுடர் அல்லது விபூதியும் நல்ல தேர்வாகும். அவற்றை தூவி சிறிது நேரம் விட்ட பிறகு, மெதுவாக தேய்த்து துடைத்தால் கண்ணாடி புதுசு போல் மாறும். சிலர் ஷேவிங் கிரீம் மற்றும் தண்ணீர் கலவையையும் பயன்படுத்துகிறார்கள். இது கூட சிறந்த விளைவைக் கொடுக்கும்.
கடைசியாக, எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து தெளித்து, ஃபைபர் துணியால் துடைத்தால் கண்ணாடியில் பளிச்சென்று ஒளி தெரியும். இந்த எல்லா வழிகளும் வீட்டில் எளிதாக செய்யக்கூடியவை. கண்ணாடியை சுத்தமாக வைத்தால், உங்கள் வீட்டு தோற்றமும் மகிழ்ச்சியாக மாறும்.