சென்னை: நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். வைட்டமின்கள்இ தாதுப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். காய்கறி பழங்களையும் அதிகளவில் சாப்பிட வேண்டும்.
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர, சூரியக் கதிர்களால் எற்படும் கருமை நிறம் மாறும். பூசணிக்காய் சிறு துண்டுகளாக்கி அதை கண்களைச் சுற்றி வைப்பதால், கண்ணை சுற்றி ஏற்படும் கருமை நிறம் மாறும் பப்பாளி பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர, முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.
புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி மிதமான சுடுநீரில் கழுவ, முகம் பொலிவு பெறும். ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.
வெள்ளரிச்சாறு, சந்தனபொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும். தலை முடி செழித்து வளர வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளிக்க வேண்டும். கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.