சென்னை: முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும் நம்மில் பலருக்கு பெரிய கேள்வியாக இருக்கும். முகப்பருக்கள் அழகான சருமத்தையும் கெடுத்து விடும்.
இந்த அன்றாட நடவடிக்கைகளை கடைப்பிடிக்கும் போது சாதாரணமாக முகப்பருக்களை கட்டுப்படுத்த முடியும். முகப்பருக்களை கைகளால் தொடுவதையும் கிள்ளுவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி நன்றாக சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவுங்கள். சூரிய கதிர் வீசுக்களால் முகம் தாக்கமடைவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள். சரியான உணவு பழக்கத்தை கடைப் பிடியுங்கள். இயற்கையாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழையை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தைகழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் முகப்பருக்கள் வேகமாக மறையும்.
இரவில் தூங்க செல்ல முன் சோற்றுக் கற்றாழையை முகத்திற்கு தடவி காலையில் கழுவினாலும் நல்ல பயன் கிடைக்கும். சோற்றுக் கற்றாழை முகப்பருக்களை இல்லாமல் செய்வதுடன் சரும ஆரோக்கியத்திற்கும் சிறந்த மருந்தாக காணப்படுகின்றது.
வேப்பம் துளிரை அரைத்து பேஸ்ட் போல் ஆக்கி முகத்தில் ஊற வைத்து தண்ணீரால் கழுவ வேண்டும். இது முகப்பருக்களை இல்லாமல் செய்வதுடன் சிறந்த கிருமி தொற்று நீக்கியாகவும் செயல்படுகிறது. சரும அழகிற்கு தேன் இன்றியமையாதது. தேன் சரும அழகை அதிகரிப்பதுடன் முகப்பருக்கள் வருவதையும் தடுக்கின்றது.
பருக்கள் இருக்கும் இடத்தில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்து சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். நம் உணவுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பூண்டிற்கு முகப்பருக்களை அழிக்கும் சக்தி உண்டு. பூண்டினை பாதியாக நறுக்கி முகப்பருக்கள் இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பேஸ்ட் ஆகவும் செய்து பயன்படுத்த முடியும். இதனால் முகப்பருக்கள் விரைவில் நீங்கி விடும்.