சென்னை: சருமத்திற்கு தயிர் பேஸ் பேக் புத்துணர்வை அளிக்கும். புளித்த தயிரை முகத்தில் தடவிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். முகம் பொலிவு பெறுவது மட்டுமல்லாமல், சருமத்திற்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
சருமத்தில் உள்ள கிருமிகளை நீக்குவதற்கும், இறந்த செல்களை அகற்றுவதற்கும் தயிர் உதவுகிறது. இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் தயிர் எடுத்து முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளுங்கள். இதன் மூலம் முகப்பருக்கள், தோல் சுருக்கங்கள் பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபடலாம்.
தயிர் உணவுக்கு மட்டுமல்ல பல வகையான சருமப் பிரச்னைகளுக்கும் உதவக் கூடியது. அந்த வகையில் தயிர் பயன்படுத்தி ஃபேஸ் பேக் அப்ளை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
1 ஸ்பூன் தயிர், 1 சிறிய வாழைப்பழம், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் என மூன்றையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளுங்கள்.