101 வயதான அமெரிக்கர் சை லிபர்மேன், நீண்ட ஆயுள் பெறுவதற்கான தனது அனுபவங்களை மக்களுடன் பகிர்ந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் உயிர் தப்பி, பொருளாதார மந்தநிலை, மாரடைப்பு மற்றும் கோமா போன்ற சிக்கல்களிலிருந்து மீண்டு வந்த இவர், தன்னுடைய நீண்ட ஆயுளுக்கான முக்கிய காரணங்களை கீழே விளக்குகிறார்.

- புகைப்பிடிக்காதிருங்கள் – இளம் வயதிலிருந்தே புகைப்பிடிக்காமல் இருப்பது அவரது நீண்ட ஆயுளுக்கு முக்கிய காரணம்.
- உறவுகளை வளர்த்தல் – மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்ப உறவுகளுடன் நல்ல தொடர்பு வைத்திருப்பது மனநலத்திற்கு உதவும்.
- உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு – தினசரி நடைபயிற்சி, நீச்சல் மற்றும் பழங்கள், மீன் போன்ற ஆரோக்கிய உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- நேர்மறை அணுகுமுறை – வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை பெரிதாக எண்ணாமல், நேர்மறையாக தொடர்ந்தும் செயல்பட வேண்டும்.
- தேவையான நேரத்தில் மருத்துவ சேவை – நோய்கள் மற்றும் உடல் சிக்கல்களை கவனித்து, காலத்துக்கு முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
- பிடித்த வேலையைச் செய்யுங்கள் – சுதந்திரமாக செய்யும் வேலை, ஆர்வமுள்ள வேலை மனநலத்திற்கு பயனாக இருக்கும்.
- அதிக அக்கறை மற்றும் அன்பான உறவுகள் – நீண்ட ஆயுளுக்கு மனநலம் முக்கியம்; அக்கறை மற்றும் அன்புடன் வாழும் வாழ்க்கை நீண்ட ஆயுளுக்கு உதவும்.
சை லிபர்மேனின் கருத்துப்படி, புகைபிடிக்காதிருத்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, நேர்மறை அணுகுமுறை, குடும்ப உறவுகள் மற்றும் பிடித்த வேலையில் ஈடுபடுவது நீண்ட ஆயுளுக்கு முக்கிய அம்சங்கள்.