உணவு சாப்பிடும்போது மட்டும் அல்லாமல், உணவுக்கு முன் மற்றும் பின் நாம் என்ன செய்கிறோம் என்பதும் உடல்நலத்திற்கு மிக முக்கியம். நிபுணர்கள் சாப்பிட்ட உடனே செய்யக்கூடாத 4 முக்கிய செயல்களை எச்சரிக்கின்றனர்.
முதலாவதாக, பழங்களை உடனே சாப்பிடுவது தவறு. பழங்கள் பசிக்காக அல்ல, சத்துக்காக சாப்பிடப்பட வேண்டும். உணவுக்கு பின் உடனே பழம் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு அதிகரித்து, செரிமான கோளாறு உண்டாகும். ஆகவே, உணவுக்கு முன் அல்லது பின் குறைந்தது 2 மணி நேர இடைவெளி வைத்துப் பழங்களை சாப்பிட வேண்டும்.

இரண்டாவது, டீ மற்றும் காபி. சிலர் உணவுக்கு உடனே டீ அல்லது காபி குடிப்பது பழக்கம். ஆனால் இது உணவின் சத்துக்கள், குறிப்பாக மினரல், கால்சியம், இரும்பு போன்றவற்றின் உறிஞ்சுதலை பாதிக்கும். ஆகவே உணவுக்கு பின் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
மூன்றாவது, கடுமையான உடற்பயிற்சி. உணவுக்குப் பிறகு உடனே அதிக உழைப்பு, பளு தூக்குதல் போன்ற பயிற்சிகள் செரிமானத்தை பாதிக்கும். குமட்டல், வாந்தி, வயிறு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குறைந்தது 2 மணி நேரம் ஓய்வு எடுத்துப் பிறகு மிதமான நடைப்பயிற்சி செய்தால் போதும்.
நான்காவது, சாப்பிட்ட உடனே குளிப்பது தவறு. இது செரிமானத்தை மெதுவாக்கி வயிறு உப்பசம், மந்தம் போன்ற தொந்தரவுகளை தரும். ஆகவே உணவுக்குப் பிறகு உடனே குளிக்காமல் சில நேரம் காத்திருப்பது நல்லது.