குழந்தைகளை வளர்ப்பது என்பது அன்பும் சவால்களும் நிறைந்த பயணம். பெற்றோர் குழந்தைகளுக்கு அன்பும் பாதுகாப்பும் அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் வாழ்க்கை பாடங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக 13 வயதை எட்டுவதற்கு முன்பே சில அடிப்படை பழக்கங்களையும் மதிப்புகளையும் கற்றுக்கொடுத்தால், குழந்தைகள் தன்னம்பிக்கை, பொறுப்பு மற்றும் தன்னிறைவு கொண்டவர்களாக உருவாகிறார்கள்.

நேர்மையின் மதிப்பை பெற்றோர் சிறுவயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும். எந்த சூழலிலும் உண்மையைச் சொல்வது நம்பிக்கையை உருவாக்கும் என்பதை குழந்தைகள் புரிந்துகொள்ள வேண்டும். அதேபோல் பண மேலாண்மையை அறிய செய்வதும் அவசியம். பணத்தின் மதிப்பு, சேமிப்பு பழக்கம் மற்றும் செலவுக்கட்டுப்பாட்டை புரிந்துகொண்டால், எதிர்காலத்தில் நிதி சிக்கல்கள் இல்லாமல் சுயமாக முன்னேற முடியும்.
வாழ்க்கையில் அடிப்படைத் திறன்களாகிய சமையல், சுத்தம் மற்றும் வீட்டுப் பொறுப்புகளை கற்றுக்கொள்வது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையையும் பொறுப்பையும் வளர்க்கும். அதேசமயம், நண்பர்களின் அழுத்தத்தை சமாளிக்கும் துணிச்சலை வளர்க்க வேண்டும். தவறான முடிவுகளுக்குச் செல்லாமல், சரியான தேர்வுகளை எடுப்பதில் பெற்றோரின் வழிகாட்டுதல் குழந்தைகளுக்கு மிகப் பெரிய ஆதாரமாக இருக்கும்.
இத்துடன், கடின உழைப்பின் மதிப்பை உணர்த்தி, இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும், கருணை, அனுதாபம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றை வலியுறுத்த வேண்டும். இவை அனைத்தும் சேர்ந்து, குழந்தைகள் பொறுப்பான, நம்பிக்கையுடன் நிறைந்தவர்களாக வளர்ந்து, எதிர்காலத்தை உறுதியானதாக மாற்றும்.