உடல் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்ட அவகோடா பழத்தில் மில்க் ஷேக் செய்முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அவகேடோ பழமானது மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகளைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது கொழுப்பினைக் குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. இப்போது நாம் அவகேடோ மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையானவை:
அவகேடோ பழம் – 3
தேன் – தேவையான அளவு
குளிர்ந்த பால் – 2 டம்ளர்
ஐஸ் கட்டிகள் – 3
செய்முறை: அவகேடோ பழத்தை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும். அடுத்து மிக்ஸியில் அவகேடோ, பால் மற்றும் தேன், ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். டேஸ்ட்டியான அவகேடோ மில்க் ஷேக் ரெடி. இது உடலுக்கு நன்மைகள் பல தரும். மேலும் கெட்டக் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது.