
வெள்ளைப் பூசணி ஒரு ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி. தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். டீ மற்றும் காஃபிக்கு பதிலாக வெள்ளைப் பூசணி ஜூஸ் குடிக்கிறதனால், நரம்பியல் அமைப்பு மற்றும் மூளையில் அமைதி நிலவும். மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் குறையும்.
சிறுநீரக பாதிப்பு, அல்சர், பைல்ஸ் உள்ளிட்ட பிரச்சனைகளால் ஏற்படும் இரத்தக்கசிவை வெள்ளை பூசணி ஜூஸ் கட்டுப்படுத்தும். இது சிறுநீரகத்தையும் சுத்தமாக வைத்திருக்கும். வயிற்றில் புழுக்கள் அல்லது தொற்று ஏற்பட்டாலும், இந்த ஜூஸ் உடனடி நிவாரணத்தை தரும். தேன் சேர்த்து குடிப்பது கூடுதல் நன்மை தரும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், வெள்ளை பூசணி ஜூஸ் வழக்கமாக குடித்தால், உடலில் உள்ள தேவை இல்லாத நீர் வெளியேறி, உடல் எடையும் குறையும். உடல் சூட்டும் குறையும். நீர்ச்சத்து அதிகரித்து, உடலுக்கு குளிர்ச்சியும் ஏற்படும். இரத்தத்தை சுத்தப்படுத்தும் செயலும் இதில் உண்டு.
வெள்ளைப் பூசணியில் வைட்டமின் பி, சி, இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடல் முழுவதும் சீராக இயங்க உதவுகிறது. இதனால் தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் குடிப்பதை ஒரு நல்ல பழக்கமாக மாற்றிக்கொள்வது சிறந்தது.