* வேது பிடிக்கும் போது போர்வைக் கொண்டு நன்கு போர்த்தி மிதமான சூடான புகை முகம், மார்புகளில் படும்படி ஆவி பிடிக்கவும்.
* நாசிப் பாதைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்ய வேது பிடித்தல் உதவுகிறது.
* சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு இது நல்ல நிவாரணி.
* தலைபாரம், தொண்டை கரகப்பு, மூக்கு அடைப்பு, நீர் கோர்த்தல், சைனஸ், தலைவலி போன்ற சிரமங்களுக்கு வேது பிடித்தல் எளிய தீர்வு.
* இயற்கையாகவே எளிதில் கிடைக்கும் மூலிகை பொருட்களை சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து வேது பிடித்தால் தொண்டையில் இருக்கும் கிருமிகள் அழிந்து நுரையீரல் தொற்று தடுக்கப்படும்.
* வேது பிடிப்பதால் தலையில் கோர்த்திருக்கும் நீர் வெளியேறி லேசா உணர வைக்கும்.
* தலை வலி, சளி, மூக்கடைப்பு மறைந்து மூச்சு விடுதல் எளிதாகும்.
* கல் உப்பு, மஞ்சள் தூள், நொச்சி இலை,, தும்பை இலை, குப்பை மேனி, வேப்பிலை, தலை வலி தைலம் கொண்டு வேது பிடிப்பது நல்ல பலன் தரும்..
* கைகால் வலி, மூட்டு வலி உள்ளவர்கள் அந்தப் பகுதியையும் வேது பிடிக்கலாம்.
* வேது பிடிப்பதால் மூக்கு அடைப்பு, நெஞ்சு சளி, தொண்டை கரகரப்பு நீங்கி இரவில் நல்ல தூக்கம் வரும்.