உடலில் ஒரு பகுதியில் அடிபடும்போது, தோலுக்கடியில் ரத்தம் உறைந்து ரத்தக் கட்டாக உருவாகிறது. இது வீக்கம், வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் இது வெறும் கண்ணால் கூட காணக்கூடியதாக இருக்கும். காலப்போக்கில் அந்த இடம் கருப்பு நிறமாக மாறும். இந்த நிலையை சரி செய்ய பல இயற்கை வழிமுறைகள் உள்ளன, அவற்றின் மூலம் ரத்தக் கட்டை விரைவில் குணப்படுத்தலாம்.
புளி மற்றும் கல் உப்பை சேர்த்து பிசைந்து பசையாக மாற்றி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசினால் ரத்தக் கட்டு குறையும். மஞ்சள் பொடியை வெந்நீரில் கலந்து களிம்பாக உருவாக்கி அந்த இடத்தில் கட்டிப் போட்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். ஆமணக்கு மற்றும் நொச்சி இலைகளை எண்ணெயில் வதக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுத்தால் ரத்தம் நன்றாக ஒட்டும். அமுக்கிராங் சூரணத்தை பசும்பாலில் கலந்து காலை மாலை குடித்தால் உட்புற ரத்தக் கட்டும் கரையும்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் “இரத்த பால்” எனும் வெளிப்பூச்சை இரத்தக் கட்டில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். கருஞ்சீரகத்தைப் பொடிசெய்து அரிசிக் கஞ்சியில் சேர்த்துக் குடிக்கலாம். ஆனால் கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டும். வெள்ளரிக்காய் குளிர்ச்சி தன்மையுடன் இணைப்பு திசுக்களை வலிமைப்படுத்தும் சிறப்பு கொண்டது. வெள்ளரிக்காயை நறுக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்து வந்தால் வீக்கம், வலி, அழற்சி குறையும்.
இந்த இயற்கை வழிமுறைகள், எளிதாக வீட்டிலேயே செய்து முடிக்கக்கூடியவை. இது போன்ற பாரம்பரிய மருத்துவங்கள், உடல் நலனுக்கே பாதிப்பு இல்லாமல், வேகமாகக் குணப்படுத்தும் தன்மை கொண்டவை. தினமும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், ரத்தக் கட்டு மெல்ல கரைந்து, பாதிக்கப்பட்ட இடம் இயல்பிற்கு திரும்பும். மருத்துவக் கலந்தாய்வோடு இவையையும் பின்பற்றினால், நல்ல பலன்கள் காண முடியும்.