
மாரடைப்பு சம்பவங்களில் பிரியாணி முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடல்நலனுக்கேற்ற உணவுகளை தவிர்த்து அதிக எண்ணெய், கொழுப்பு உள்ள பிரியாணி போன்ற உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வது ஆபத்தாக இருக்கிறது. சமீபத்தில் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடும் பழக்கம் பெருகியுள்ளது. இதனால் மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கெட்ட கொழுப்பு போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன.

ஓமந்தூரார் அரசு மருத்துவமனை இருதய நிபுணர் மெஜிலா கூறுகையில், வாரத்தில் ஒரு முறை மட்டுமே மதிய நேரத்தில் சாப்பிடுவது நல்லது என்கிறார். இரவு நேரத்தில் சாப்பிடும் போது ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் செரிமான தடை ஏற்பட வாய்ப்பு அதிகம். சில கடைகள் பலமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்துவதால் இதயத்துக்கு பாதிப்பு ஏற்படலாம். இது தொடர்பான உணவு பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கைகளும் வழக்கமானவை.
மனிதர்கள் தினசரி 3–5 டீஸ்பூன் அளவிலேயே எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் பிரியாணி போன்ற உணவுகள் அதை மீறி கொழுப்பை அதிகமாக தருகின்றன. சாப்பிடும் நேரமும் மிக முக்கியமானது. காலை 10 மணிக்குள் மற்றும் இரவு 7 மணிக்கு முன் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லது. நள்ளிரவு உணவு பழக்கங்களை தவிர்த்தாலே ஆபத்துகளை குறைக்கலாம்.
இனி பிரியாணி விருப்பத்தை கட்டுப்படுத்த வேண்டும். உடல் நலனை காத்துக் கொள்ளும் நோக்கத்தில் உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்