சென்னை: மூச்சு திணறல் முதல் நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் தூதுவளை சரி செய்துவிடும்.
தூதுவளை கொடி மற்றும் இலை போன்ற அனைத்து பகுதிகளிலும் சிறுசிறு வளைந்த முட்களைக் கொண்டிருக்கும். வேலிகள் அல்லது மற்ற செடியினங்களைப் பற்றிக்கொண்டு படர்ந்து ஏறும் தன்மை கொண்டது.
இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. உருண்டை வடிவில் சிவந்த நிறப் பழங்களைக் கொண்டிருக்கும். இதன் பூக்கள் ஊதா நிறத்தில் பூக்கும். வெள்ளை நிறத்தில் பூக்கும் அரிதான தூதுவளை வகையும் உண்டு.
தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, தூதுளம், தூதுளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இதில் சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. குறிப்பாக ஆஸ்துமாவுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.
மழைக்காலம் வந்து விட்டாலே சளியும். காய்ச்சலும் அழைக்காமல் வந்து விடும் .பலருக்கு இந்த மழைக்காலத்தில் ஆஸ்த்மா மற்றும் மூச்சுத்திணறல் இருமல் போன்றவற்றால் அவதிப்படுவர். தூதுவளையின் மகத்துவம் தெரிந்தவர்கள் அதை பல விதமாக சமைத்து சாப்பிட்டால் இந்த பிரச்சினைகள் எல்லாம் தவிடு பொடியாகும்.
அதாவது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல். தொண்டை புண் போன்றவற்றையும் ,பெரியவர்களுக்கு ஏற்படும் ஹைபோ தைராய்டு முதல் அனைத்து மூச்சு திணறல் முதல் நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் சரிசெய்து விடும் .இதற்கு இந்த தூது வளையை ரசமாகவும் ,குழம்பாகவும் சமைத்து சாப்பிடலாம்
ரசம் செய்முறை: தூது வளையுடன் தக்காளி கொத்தமல்லி, கருவேப்பிலை ,மிளகுதூள் ,சீரக தூள் பெருங்காயம் சேர்த்து ரசம் வைக்கலாம்
தூதுவளை குழம்பு: தூது வளையுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் புளி சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்தால் குழம்பு ரெடி .மேலும் இதை துவையல் செய்தும் சாப்பிடலாம். பச்சையாக தினமும் நாலு தூதுவளை இலையை சாப்பிட்டால் புற்று நோயை கூட வராமல் தடுக்கலாம் .