சென்னை: உளுந்தங்களி அளிக்கும் நன்மைகள்… வயதிற்கு வந்த இளம் பெண்பிள்ளைகளுக்கு கர்ப்பப்பை வலுப்பெறும். கருவை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிக்க கூடிய உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.
உளுந்து களி சாப்பிடுவதால் உடலில் இரும்புச்சத்து அதிகரித்து தாய்க்கும், சேய்க்கும் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. குழந்தை பெற்ற பெண்கள் உளுந்து களி சாப்பிட தாய்ப்பால் அதிகம் சுரக்கும்
பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.
உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது. நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன.
உளுந்து நார்ச்சத்து அதிகம் கொண்டதாகும். உளுந்து களி சாப்பிட்டு வருவதால் குடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. உளுந்து களியை சாப்பிடுவதால் வயிற்று போக்கை நிறுத்தி, உடலுக்கு பலத்தை சேர்க்கிறது. மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.
உளுந்து களியை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படும். சிறுநீரகங்கங்களில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். சிறுநீரை நன்கு பெருக்கி உடலில் இருக்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற செய்யும்.