காலை நடைப்பயிற்சி முடிந்து இளநீர் குடிப்பவர்கள் பலரைப் பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற காட்சிகள் நடைமுறையில் மட்டுமல்லாது, பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களிலும் பார்க்கிறோம். இளநீர் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இதை பருகுவதால் வெப்பத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்,இது உங்களுக்கு ஆற்றலை வழங்கவும், மனதையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
இளநீரில் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இளநீர் இயற்கையானது மற்றும் சிறந்த மினரல்களை கொண்டுள்ளது. கோடையில் இளநீர் குடிப்பது மிகவும் நன்மை அளிக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நீரிழப்பு மற்றும் வெப்ப பக்கவாதம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதிலும், இது பயனுள்ளதாக கருதப்படுகிறது. இளநீரை குடிக்க சிறந்த நேரம் எது? நொய்டாவில் உள்ள டயட் மந்த்ரா கிளினிக்கின் நிறுவனரும், மூத்த உணவியல் நிபுணருமான காமினி சின்ஹா கூறுகையில், கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாததால், இளநீர் மிகவும் ஆரோக்கியமானது, இது இயற்கை இனிப்பு மற்றும் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. இது நீரிழிவு கட்டுப்பாட்டுக்கு நல்லது மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மையிலிருந்தபாதுகாக்கிறது.
இளநீர் உடலை ஆற்றலுடன் வைத்திருக்க உதவுகிறது. இளநீர் குடிப்பதற்கு சரியான நேரம் எதுவும் இல்லை. காலையில் வெறும் வயிற்றிலும், மதிய உணவுக்குப் பிறகும், அல்லது இரவு உணவிற்குப் பிறகும் இளநீரைக் குடிக்கலாம். அதாவது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இளநீர் குடிக்கலாம். இது ஆரோக்கிய நன்மைகளை மட்டுமே தருகிறது, எந்த பக்க விளைவுகளும் தருவதில்லை. உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, காலை நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு இளநீர் குடிப்பது மக்களுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது மற்றும் உடல் சோர்வை நீக்குகிறது. இது உடலில் நீர்ச்சத்து சீராக வைத்திருக்க உதவுகிறது. சாப்பிட்ட பிறகு இளநீர் குடிப்பதால் செரிமான சக்தி அதிகரிக்கும்.
இரவு உணவிற்கு முன் அல்லது பின் இளநீர் குடிப்பது உடலுக்கு நன்மை அளிக்கிறது மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. இருப்பினும், சிறுநீரகப் பிரச்சனைகள் அல்லது வேறு ஏதேனும் தீவிர நோய் உள்ளவர்கள் இளநீரைக் குடிப்பதற்கு முன் மருத்துவர் அல்லது உணவியல் நிபுணரின் ஆலோசனை கேட்டு குடிக்க வேண்டும். மேலும் அவர் கூறுகையில், இளநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மையளிப்பதாக இருந்தாலும், இளநீரை வெட்டியவுடன் அப்படியே குடிப்பது கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. எனவே இளநீரை வெட்டியவுடன் ஒரு பாத்திரத்தில் ஊற்றி வடிகட்டிய பிறகு தான் குடிக்க வேண்டும். இளநீரில், பூஞ்சைகள் உள்ளது, எனவே அதை அப்படியே குடிப்பதால், இந்த பூஞ்சைகள் உடளுக்குள் சென்று தீங்கு விளைவிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் இளநீரை எச்சரிக்கையுடன் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.