அசைவ உணவுகளை 40 வயதுக்கு மேல் தவிர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக இருப்பது பற்றி மருத்துவர் சிவராமன் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
மீனில் புரதங்கள் மற்றும் கொழுப்புகள் மிகவும் எளிதில் செரிமானமாகும். குறைந்த கொழுப்பு கொண்டதால், வயதானவர்களுக்கும் மீன் உணவு ஏற்றது.
மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்கலாம்.அதிக எண்ணெய் மற்றும் பொரித்து எடுக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.ஆவியில் வேக வைத்த மீன் சிறந்த தேர்வு.அதிக எண்ணெய், மசாலா சேர்க்கப்படாத அசைவ உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வயதானவர்களுக்கு உடல் உழைப்பு குறைவதால், அசைவ உணவின் அளவைச் சரியாக கட்டுப்படுத்துவது நல்லது.அசைவம் முழுமையாக தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
இக்கட்டுரையில் கூறிய உணவுப் பழக்கங்களை பின்பற்றும் முன், உங்கள் உடல் நிலைக்கு ஏற்றதாக மருத்துவரின் ஆலோசனை பெறவும்.