முடி உதிர்வு என்பது வாழ்க்கை முறை, உணவு பழக்கம், மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் ஏற்படும் பொதுவான பிரச்சனை ஆகும். இது பெண்கள் மற்றும் ஆண்கள் என இருவருக்கும் சமமாகவே பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்போது, முடி உதிர்வை தடுக்கும் திறனுள்ள சில உணவுகளை பற்றி பார்க்கலாம்.
முதலில், முட்டைகள் பயோட்டின் மற்றும் புரதத்தின் மிகச்சிறந்த மூலமாக இருக்கின்றன. முடியின் வலிமை மற்றும் வளர்ச்சிக்கு இவை அதிக ஆதரவு தருகின்றன. அதேபோல் பீன்ஸ் வகைகள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் நிறைந்தவை. இவை முடி உதிர்வைத் தடுக்கும். புதிய முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.

வால்நட்ஸ் போன்ற பாதாம் வகைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் ஃபோலேட் கொண்டவை. இவை தலைச் சதை செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. தினமும் 2-3 வால்நட்ஸ்களை ஊறவைத்து சாப்பிடும் பழக்கத்தை உருவாக்குவது நல்லது.
சூரியகாந்தி விதைகள் பலவித சத்துக்களை கொண்டுள்ளன. இதில் துத்தநாகம், வைட்டமின் B, E, பையோட்டின் மற்றும் இரும்பு போன்றவை நிறைந்துள்ளன. இவை கூந்தலுக்கு தேவையான சக்தி மற்றும் உயிரணுக்களை ஏற்படுத்த உதவுகின்றன.
நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் C மற்றும் இரும்பு உள்ளதால், முடி வேர்களுக்கு ஆழமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது முடி உதிர்வை தடுப்பதுடன், கூந்தல் வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
ஆளி விதைகள் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இது முடி வேர்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, உயிரற்ற முடிகளை மீண்டும் வளரச்செய்யும்.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு பயோட்டின் நிறைந்தது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் முடி வலிமையிழக்காமல் தடுக்கிறது.
பசலைக் கீரை முக்கியமான சத்துக்களான இரும்பு, வைட்டமின் A, C மற்றும் ஒமேகா 3 அமிலங்களை கொண்டுள்ளதால் முடிக்கு தேவையான ஈரப்பதத்தை தருகிறது.
இந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் முடி உதிர்வு குறைந்து, ஆரோக்கியமான கூந்தலுக்கு வழிவகுக்கும். சரியான உணவு, போதிய துன்பமின்றி தூக்கம் மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கும் பழக்கவழக்கங்கள் முடி நலத்துக்கு முக்கியம்.