சென்னை: ரெட் ஒயின் இதயத்திற்கு பல நன்மைகள் தருவதாக பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றில் சில…
HDL என்று சொல்லக்கூடிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
ரத்தத்தில் கட்டிகள் உருவாகாமல் தடுக்கிறது. LDL என்று சொல்லக்கூடிய கெட்ட கொழுப்புகளால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்கிறது.
இரத்த நாளங்களை ஒழுங்குப்படுத்தும் செல் அடுக்குகளின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
ரெட் ஒயினில் பல நன்மைகள் இருந்தாலும் அதை மிதமான அளவில்தான் குடிக்கவேண்டும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். ஆல்கஹால் எடுத்துக்கொள்ளவே வேண்டாம் என எச்சரிக்கப்பட்டாலும் பலரால் அதை தவிர்க்கமுடிவதில்லை. அளவுக்கு மீறி ஆல்கஹாலை எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு பெரும் தீங்காக அமையும்.