சென்னை: முட்டைக்கோஸ் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பது என்று தெரிந்த விஷயம். அதிலும் சில கெடுதல்கள் உள்ளது என்பதை அறிவீர்களா?
இயற்கை நமக்கு அளித்துள்ள பச்சை இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் பலருக்கும் விருப்பமான ஒரு காய்கறி ஆகும். இந்த இலைக்காய்கறி உங்களுக்கு பல அற்புத பலன்களை வழங்கக்கூடியது.
இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இது இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது
முட்டைக்கோஸால் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ அதேஅளவு அதனால் ஆபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு முட்டைகோஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என்றால் அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு தயாராகிக்கொள்ளுங்கள்.
இதனால் ஏற்படும் பாதிப்புகளின் அளவுகள் உங்கள் உடல் வலிமையை பொறுத்து மாறுபடும். இந்த பதிவில் முட்டைக்கோஸால் ஏற்படும் பகைவிளைவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
முட்டைகோஸால் வாயுக்கோளாறு ஏற்படும் எனது பலரும் அறியாத ஒரு தகவலாகும். ஆனால் அதுதான் உண்மை. ப்ரோக்கோலி, காலிப்ளவர், பீன்ஸ் போன்ற உணவுகளை போலவே முட்டைகோஸும் உங்கள் சிறுகுடலில் உள்ள என்சைம்களால் எளிதில் செரிக்கக்கூடிய காய் அல்ல.
அவை உங்கள் பெருங்குடலை அடைந்தவுடன் அவற்றின் மீது ஏற்படும் பாக்டீரியா தாக்குதல் வாயுவை உண்டாக்கும். உங்கள் வயிற்றில் வீக்கமோ அல்லது அடிக்கடி வாயுவெளியேறும் பிரச்னையோ இருந்தால் அதற்கு காரணம் முட்டைக்கோஸாகத்தான் இருக்கும். அதிகளவு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்கள் தைராய்டு சுரப்பியின் இயல்பான செயல்பாட்டில் தலையிடக்கூடும். இதற்கு காரணம் முட்டைகோஸ் உங்கள் தைராய்டு சுரப்பி போதுமான அளவு அயோடின் சத்தை எடுத்துக்கொள்ள விடாமல் தடுக்கிறது. அப்படி இருக்கும்போது அதிகளவு முட்டைகோஸ் சாப்பிடுவது உங்களுக்கு அயோடின் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
இதனால் உங்களுக்கு ஹைப்போதைராய்டு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதை எப்போதாவது சாப்பிடுவது பாதிப்பை ஏற்படுத்தாது ஆனால் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கவும். குறிப்பாக காலிப்ளவர், கீரை, பருப்புகள், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது தைராய்டு சுரப்பியில் பிரச்னையை ஏற்படுத்தும்.