சிறப்பான சுவையால் பலராலும் விரும்பப்படும் அன்னாசிப்பழம் குறித்து பரவியிருக்கும் “மனித சதையை உண்ணும் பழம்” என்ற தகவல் வியப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. உண்மையில் இது என்ன என்பது பற்றிய விபரத்தை இங்கே பார்க்கலாம்.

அன்னாசிப்பழம் வெப்பமண்டல நாடுகளில் அதிகம் கிடைக்கும். இதில் ப்ரோமெலைன் (Bromelain) எனும் நொதி உள்ளது. இது ஒரு புரோட்டியோலிடிக் எனப்படும் நொதியாகும், இது புரதங்களை உடைத்து அமினோ அமிலங்களாக மாற்றும் திறன் கொண்டது. அதாவது, மனிதன் உடலில் உள்ள திசுக்களில் உள்ள புரதங்களை கூட பிரிக்கக்கூடிய சக்தி இதற்கு உள்ளது.
அந்த வகையில், அன்னாசிப்பழம் நம்முடைய நாக்கை தொடும் போதே சிலருக்கு எரிச்சலான உணர்வை ஏற்படுத்தும். இதற்குக் காரணம் ப்ரோமெலைன் நொதி தான். இவ்விதமான சிறப்புத்தன்மையால், அன்னாசி சாறு இறைச்சி தொழிலில் இயற்கையான மென்மையாக்கி ஆகவும் பயன்படுகிறது.
இந்த தகவலால் பயப்பட வேண்டியதில்லை. அன்னாசி சாப்பிடும்போது, ப்ரோமெலைனின் அளவும், அது உங்கள் வாயில் சுரக்கும் நேரமும் குறைவாகவே இருக்கும். மேலும் உங்கள் வயிற்றில் உள்ள செரிமான நொதிகள் அதை செயலற்றதாக்கிவிடும். எனவே, அன்னாசிப்பழம் உடல் சதையை உண்கிறது என்பது அளவுக்கு மீறினால் தீமை செய்யும் என்பதையே குறிக்கிறது – ஆனால் வழக்கமான அளவில் சாப்பிடுவது பாதுகாப்பானதும், ஆரோக்கியத்துக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
அன்னாசியில் ப்ரோமெலைன் என்ற நொதி உள்ளது. இது புரதங்களை உடைக்கும் தன்மை கொண்டது. அதனால்தான் “உங்களையும் உண்ணும் பழம்” எனப் பெயர் பெற்றது. ஆனால், சாதாரணமாக சாப்பிடுவது ஆபத்தல்ல. இது வைட்டமின் A, K, ஆக்ஸிடென்ட்கள், துத்தநாகம் போன்ற பல நன்மைகள் கொண்டது