சென்னை: வேப்பிலையில் பல நன்மைகள் உண்டு. நம் முன்னோர்கள் கண்டறிந்த நோய் தீர்க்கும் மற்றும் நோயை அண்ட விடாத ஓர் இயற்கையின் அற்புதம் தான் வேப்பிலை கொழுந்து என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வேப்பிலை கசாயம் கிருமிகளை கொன்று காய்ச்சலை குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும். புற்று நோய்க்கு எதிரி வேப்பிலையே. வயிற்று புண்களை ஆற்றி, கிருமிகளை அழித்து வயிற்றை முற்றிலும் சுத்தப்படுத்தி அனைத்து பிரச்சனைகளையம் தீர்க்கக் கூடியது.
வேப்பிலையை எலுமிச்சை சாற்றுடன் கலந்து அரைத்து தலைக்கு தேய்க்க பித்தத்தால் ஏற்படும் மயக்கம் சரியாகும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும் திறன் வேப்பங்காய்க்கு உள்ளது.
மயக்கம், குமட்டல், வாந்தி, போன்றவைக்கு எளிய தீர்வு தருகிறது வேப்பிலை. நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும் திறன் இதன் சாறில் உள்ளது.
பித்தவெடிப்பிற்கு வேப்பிலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வந்தால் பித்தவெடிப்பு மற்றும் கால் பாதம் எரிச்சல் போன்றவை குணமடையும்.
மலேரியா காய்ச்சல் குணமடைய, தினமும் காலை நேரத்தில் 10 வேப்பங்கொழுந்து எடுத்து அதனுடன் 5 மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். வேப்பக்குச்சியால் தினந்தோறும் பல் துலக்கினால் பற்கள் வலிமை பெறும், ஈறுகள் பிரச்சனையையும் தீர்க்கும்.
க்ஷ