சென்னை: பொதுவாக பூண்டு நம் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் .பூண்டுக்குள் ஏராளமான மருத்துவ குணம் அடங்கியுள்ளது .பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிபயாடிக் பண்புகளைக் கொண்ட பூண்டு, நமக்கு அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. வைட்டமின் சி நிறைந்த, பூண்டு காய்ச்சல், சளி போன்ற நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. சிறிதளவு சூடான நீரில் உப்பு மற்றும் பூண்டு சாறு கலந்து காதில் 3 துளிகள் ஊற்றுவது காது வலி போக்க வல்லது.
ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது.
பொதுவாக பூண்டைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை குணமாகி ஆரோக்கியம் பிறக்கும் .
பூண்டு சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இலகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் தூரத் துரத்திவிடலாம். பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கின்றன, ஆன்ஜியோடென்சின் ஹார்மோனைத் தடுக்கின்றன.
அடிக்கடி ஆறு பூண்டுகளை வறுத்துச் சாப்பிடுங்கள். இதனால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில், பூண்டு செரிமானமாகிவிடும். அடுத்த ஒரு மணி நேரத்தில் தொடங்கி, பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்து உடல்நலத்தைக் காக்கும்.பூண்டு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது .