மங்குஸ்தானின் மற்றொரு பெயர் ‘ரம்புட்டான்’ பழம். இது பெரும்பாலும் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் குற்றாலம் பகுதிகளில் மலைப் பகுதிகளில் காணப்படுகிறது
மங்குஸ்தான் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் ‘சி’ உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. ஒமேகா அமிலம் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சக்தியும் இதற்கு உண்டு.
நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வயிற்றுப் பிரச்சனைகளைக் குறைத்து, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
மங்குஸ்தான் பழச்சாறு சாப்பிடுவதால், வெப்பத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும். உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நாக்கு வறண்டு போகாமல் தடுக்கிறது. கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்கள் உடலின் ஆற்றலை அதிகரிப்பதில் மற்றும் சீரான வளர்ச்சியை அடைவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மங்குஸ்தான் பழம் ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இது கண் ஆரோக்கியம், நகங்கள், தோல் மற்றும் முடி பளபளப்பாகவும் உதவுகிறது.
எலும்பு அமைப்பு வளர்ச்சிக்கு தேவையான இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் மற்றும் காசநோய்களை எதிர்த்துப் போராடும் அபூர்வ சக்தி நிறைந்துள்ளது.
இப்பழத்தை சாப்பிடுவதால் கண் வறட்சி நீங்கி கண் எரிச்சல் நீங்கும். உடல் பருமனை குறைக்கிறது. சுருக்கங்கள் நீங்கி, சருமப் பொலிவு அதிகரித்து இளமைத் தோற்றம் உண்டாகும். இதன் மேற்பகுதி முள்ளாகவும், இனிப்பு மற்றும் புளிப்புச் சுவையுடனும் இருக்கும்.
உணவுக்குழாயில் உள்ள கிருமிகளை அழித்து, சிறுநீரை நன்கு வெளியேற்றும் ஆற்றல் இப்பழத்திற்கு உண்டு.