சென்னை: புதினாவை சமையலில் சேர்த்து சமைத்தால் அதன் மணம் உணவுப் பொருட்களின் சுவையைக் கூட்டும். புதினா இலைகள் உடம்பின் பல நோய்களுக்கு மருந்துகளாகவும் பயனளிக்கும்.
புதினா இலைகளை சுத்தம் செய்து, துவையல் அரைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் பித்தம் நீங்கும். டீ தயாரிக்கும் போது, டீ தூளுடன் ஐந்து அல்லது ஆறு புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும். புதினாவை வெந்நீர் காய்ச்சும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் பித்தத்தினால் ஏற்படும் நோய்கள் தீரும்.
பச்சையாக வெங்காயத்துடன் உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டால் பித்தத்தினால் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். ஆவாரம் பூவைக் காய வைத்து, பொடி செய்து டீத்தூளுக்கு பதிலாக உபயோகப்படுத்தினால் சுவை மிக்க டீ கிடைப்பதுடன் பித்தம், ரித்து குடித்தால் பித்தம் நீங்கி விடும்.