காலை நேரத்தில் உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும் “டிடாக்ஸ்” பானங்கள் பருகுவது ஆரோக்கியம் பேணுபவர்களிடையே பிரபலமாகி வருகிறது. அதில் ஓமம் நீரும், சியா விதை நீரும் முக்கிய இடம் பெற்றுள்ளன. இவை இரண்டும் உடலுக்கு பல நன்மைகளை வழங்குவதோடு, எடை குறைப்பிலும் துணைபுரிகின்றன.

பண்டைய காலத்தில் ஆயுர்வேதத்தில் ஓமம் ஒரு முக்கிய மூலிகையாக கருதப்பட்டது. இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து காலையில் குடிக்கும் போது செரிமானம் சீராகி, வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. வீக்கம், நீர் தங்கல் குறையவும் பசியின்மை கட்டுப்படவும் உதவுகிறது. ஓமத்தில் உள்ள தைமால் சேர்மம் குடலை சுத்தப்படுத்தி, கொழுப்பு எரிக்கும் செயல்பாட்டை வேகப்படுத்துகிறது. அதனால் இது இயற்கையான கொழுப்பு கரைக்கும் பானம் என்று அழைக்கப்படுகிறது.
மற்றபுறம், சியா விதைகள் நவீன சூப்பர்ஃபுட் எனக் கருதப்படுகின்றன. தண்ணீரில் ஊறிய பின் ஜெல்லி போல மாறும் இவ்விதைகள் நார்ச்சத்து, புரோட்டீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. இதனால் நீண்ட நேரம் பசி எட்டாமல் வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கிறது. கூடுதலாக ஆக்ஸிஜனேற்றிகள் உடலை பாதுகாத்து நீடித்த ஆற்றலை வழங்குகின்றன.
எடையை குறைக்க விரும்புவோருக்கு ஓமம் தண்ணீர் குடல் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு ஏற்றது. சியா விதை தண்ணீர் அதிக பசியை கட்டுப்படுத்த விரும்புவோருக்கு சிறந்தது. இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்தினால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இதனுடன் சீரான உணவு, உடற்பயிற்சி, தூக்க பழக்கம் ஆகியவை இணைந்தால் எடை குறைப்பு இயல்பாகவே சாத்தியமாகும்.