உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முதலில் தொப்பையை குறைக்கும் விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். பலர் கலோரி குறைப்பு முறையை பின்பற்றினாலும், அதை தொடர்ந்து கடைபிடிப்பது சுலபமல்ல. பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் ஜேம்ஸ் வைட் சில பயனுள்ள ஆலோசனைகள் வழங்கியுள்ளார். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளே எடையை தீர்மானிக்கின்றன. அதிக கார்போஹைட்ரேட் உள்ள காலை உணவுகள், பசியை அதிகரித்து, தவறான நேரத்தில் தவறான உணவுகளை சாப்பிட வைக்கும்.

சாண்ட்விச் மற்றும் பிரெட் போன்றவை அதிக இன்சுலின் உற்பத்தியை தூண்டும். அதன் விளைவாக, இரத்த சர்க்கரை குறைந்து, பசியை மிக விரைவாக உருவாக்கும். புரோட்டீன் பார்கள் மற்றும் ஓட்ஸ் பார்கள் ஆரோக்கியமானவை என கருதப்படினும், அவை கலோரியில் அதிகமாக இருப்பதால் கட்டுப்பாட்டுடன் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பழம் மற்றும் காய்கறிகளால் அதற்கான மாற்றத்தை பெற முடியும். மயோனையும் அவ்வாறு தான். சாலட் அல்லது சாண்ட்விச்சில் கூட சிறிய அளவில் இருந்தாலும் அது 500 கலோரிகளை வழங்கும். உலர்ந்த பழங்கள், நட்ஸ் போன்றவை நல்ல கொழுப்புகளைக் கொண்டிருந்தாலும், அதிகமாக சாப்பிடுவதால் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிக்கக்கூடும்.
இதுபோன்ற உணவுகளை கட்டுப்படுத்தினால், கலோரி பற்றாக்குறையை பராமரிப்பது சுலபமாகும். உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும். இதை ஒரு பழக்கமாக மாற்றி விட்டால், நீண்டகால எடை இழப்பு சாத்தியமாகும். தினசரி உணவில் சிறிய மாற்றங்கள் செய்தால் கூட பெரிய மாற்றங்களை காணலாம். உணவுகளை திட்டமிட்டு சாப்பிடும் பழக்கம் முக்கியம். உடற்பயிற்சி மட்டுமின்றி உணவுக் கட்டுப்பாடும் தேவைப்படுகிறது.