கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து, மக்களை சோர்வடையச் செய்கிறது. வெயிலின் சோர்வைப் போக்க நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். வெயிலில் அதிக நேரம் செலவிடும் போது, சருமம் விரைவாக டேன் ஆகி விடுகிறது.

வெயிலின் தாக்கம் சருமத்தையும், குறிப்பாக முகத்தையும் பாதிக்கும். மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் விற்பனையாளர்கள் போன்ற பலரும் வெயிலில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால், முகம் கருமையடைவதைத் தடுக்க பலர் பியூட்டி பார்லர்களில் ஃபேஷியல் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. ஆனால், எப்போதும் பியூட்டி பார்லர்களுக்குச் செல்லும் வாய்ப்பு இல்லை. மேலும், ஃபேஸ் க்ரீம், சீரம் போன்ற பொருட்களில் உள்ள இரசாயனங்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மக்கள் கவலைப்படுகிறார்கள்.
இதற்கு பதிலாக, வீட்டிலேயே எளிய முறையில் ஃபேஷியல் செய்து முகக்கருமையை போக்க முடியும். இதற்காக, ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவி, தேவையான அளவு தயிருடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும். பசை பதத்திற்கு வந்ததும், அதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இந்த இயற்கை ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையை நீக்கி, முகத்தைப் பொலிவுறச் செய்யும். மேலும், இதில் எந்தவித இரசாயனமும் இல்லாததால், ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
இந்த ஃபேஷியல் டிப்ஸ், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்தினால், முகத்தில் உள்ள கருமையை போக்கி அழகான பொலிவை பெற்றுக்கொள்ள முடியும்.