இரத்தம் என்பது நமது உடலில் அத்தியாவசியமான கூறுகளில் ஒன்று. இதில் வெள்ளை இரத்த அணுக்கள், சிவப்பு இரத்த அணுக்கள், பிளாஸ்மா மற்றும் பிளேட்லெட்டுகள் ஆகியவை அடங்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி செயல்பாடுகள் உள்ளன. இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு அதை உடல் முழுவதும் பம்ப் செய்யும் வேலை செய்கிறது. மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் சுமார் 96,000 கிலோமீட்டர்கள் எனக் கூறப்படுகிறது.

உடலில் போதுமான அளவிலான இரத்தம் இல்லாதபோது, உடலின் அனைத்து உறுப்புகளும் சரியாக செயல்பட முடியாது. இரத்தம் இல்லாமல் நீண்ட நேரம் கழிந்தால், சோர்வு, சுவாசக்கழிப்பு, தோல் நிறம் மாறுதல், தலைவலி உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும். இதை “இரத்த சோகை” என அழைக்கின்றனர். இது ஹீமோகுளோபின் அளவின் குறைவால் ஏற்படுகிறது. மாயோ கிளினிக்கின் ஆய்வின்படி, மாற்றமடைந்த உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இரத்த சோகை தற்போது பொதுவான பிரச்சனையாகி விட்டது.
இரத்த சோகை சிகிச்சை இல்லாமல் தொடர்ந்தால், அது வைட்டமின் B12 மற்றும் B9 குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். மேலும், எச்.ஐ.வி., மூட்டுவலி, சிறுநீரக நோய் மற்றும் புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கான அபாயத்தையும் அதிகரிக்கும்.
இரத்தம் குறைவாக உள்ளவர்கள், உணவில் வைட்டமின் B12, C, B9 மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்க்க வேண்டும். வெங்காயம், பீட்ரூட், பசலைக் கீரை, முட்டைக்கோஸ், கடுகு, வெல்லம், கரும்புச் சாறு, பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை போன்ற உணவுகள் இரத்த உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. மேலும், செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட தண்ணீரை தினமும் பருகுவது மற்றும் தினசரி பழங்களை உணவில் சேர்ப்பதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
உடலில் ஏற்பட்ட இரத்த குறைபாடு ஒரு சாதாரணம் அல்ல. அதற்காக சரியான நேரத்தில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.