வருடம் முழுவதும் கிடைக்காத, ஆனால் குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே விளையும் சில காய்கறிகள் மனித உடலுக்கு மிகுந்த நன்மைகள் தரக்கூடியவை. அதில் ஒன்றாக தும்பங்காய் குறிப்பிடத்தக்கது. இது தமிழ்நாட்டில் மழைக்காலத்தில் மட்டுமே விளையும் ஒரு சிறப்பு காய்கறி. நாட்டின் பிற பகுதிகளில் இது ககோடா, வான் கரேலா, முள் பூசணி என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.

தும்பங்காய் சிறியதும், முட்கள் நிறைந்ததும் தான். ஆனால் இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் கலோரி அளவு குறைவாக இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கேற்ற உணவாக இருக்கிறது.
தும்பங்காய் பசியை தற்காலிகமாக நிறுத்தி, மீண்டும் மீண்டும் பசி எடுப்பதை தடுக்கும். இதன் நார்ச்சத்து செரிமானத்தையும் மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், இரத்த சர்க்கரை கட்டுப்பாடு உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகளுக்கும் இது தீர்வாக இருக்கிறது.
மேலும், தும்பங்காய் உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது. சோர்வையும் சோம்பலையும் குறைக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, புற்றுநோய், தோல் மற்றும் கண் நோய்கள், கல்லீரல் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றுக்கும் தடுப்பாக செயல்படுகிறது.
இதுபோன்று சிறப்பான குணங்களை கொண்ட தும்பங்காயை உணவில் அடிக்கடி சேர்த்தால், ஆரோக்கியமான வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்வது சாத்தியம்.