ஜூஸ் போடுவது முதல் எலுமிச்சை சாதம், ஊறுகாய், பூஜை அறை தேவைகள், சாமான்களை துலக்குவதற்கு என எலுமிச்சை பழம் பல்வேறு விதமான விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சம்மர் சீசனில் அனைவரது வீட்டிலுமே எலுமிச்சை பழம் கட்டாயமாக இருக்கும். இந்த மாதிரியான நாட்களில் எலுமிச்சை பழங்களை வாங்குவது மிகவும் எளிது. ஆனால் பிற நாட்களில் எலுமிச்சை பழம் கிடைப்பதே அரிதாக இருக்கும். அவ்வாறு கிடைத்தாலும் அவற்றின் விலையானது மிகவும் அதிகமானதாக இருக்கும் என்பதால் விலை மலிவாக கிடைக்கும் பொழுதே அவற்றை வாங்கி நாம் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று நினைப்போம்.
அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சை பழங்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு அவற்றை சரியான வெப்ப நிலையில் நாம் சேமித்து வைக்க வேண்டும். அதனை நீங்கள் செய்யாவிடில் எலுமிச்சை பழம் விரைவாக கெட்டுவிடும். பெரும்பாலான வீடுகளில் பெண்கள் எலுமிச்சை பழங்களை சேமித்து வைப்பது வழக்கம். ஒருவேளை நீங்களும் உங்களுடைய வீட்டில் எலுமிச்சை பழங்களை சேமித்து வைக்க நினைக்கிறீர்கள் என்றால் அவை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் ஃபிரஷ்ஷாக இருப்பதற்கு உதவக்கூடிய ஒரு சில குறிப்புகளை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.
எப்பொழுதும் எலுமிச்சை பழங்களை வாங்கும் பொழுதே அவை ஃபிரஷ்ஷாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள். மேலும் மெல்லிய தோல் கொண்ட எலுமிச்சை பழங்களை தேர்ந்தெடுத்து வாங்கவும். ஏனெனில் கடினமான தோல் கொண்ட எலுமிச்சை பழங்களை காட்டிலும் இந்த பழங்களில் அதிக சாறு இருக்கும். இப்போது எலுமிச்சை பழங்களை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க உதவும் எளிமையான குறிப்புகளை பார்க்கலாம். ஏர் டைட் கன்டைனர்களை பயன்படுத்தவும் : எலுமிச்சை பழங்களை சேமித்து வைப்பதற்கு காற்று உள்ளே செல்ல இயலாத ஏர் டைட் கன்டைனர்கள் சிறந்த ஆப்ஷனாக இருக்கும். இதற்கு முதலில் நீங்கள் எலுமிச்சை பழங்களை நன்றாக கழு வி, சுத்தம் செய்து தண்ணீர் இல்லாதவாறு உலர வைக்க வேண்டும்.
அதன் பிறகு அவற்றை பாலித்தீன் பை ஒன்றில் போட்டு காற்று உள்ளே செல்ல இயலாத டப்பாக்களில் வைத்து மூடி வைக்கவும். அதன் பிறகு இந்த டப்பாவை நீங்கள் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். எலுமிச்சை பழங்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் அவற்றின் மீது சிறிதளவு எண்ணெய் தடவி டப்பாக்களில் போட்டு அதனை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம். எலுமிச்சை பழங்களை சேமித்து வைப்பதற்கு நீங்கள் தாராளமாக ஜிப் லாக் பைகளை பயன்படுத்தலாம். இது மாதிரியான பைகள் மார்க்கெட்டுகளில் எளிமையாக கிடைக்கும்.
எலுமிச்சை பழங்களை அவற்றில் போட்டு நீங்கள் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். அலுமினியம் ஃபாயில் கொண்டு சுற்றி வைக்கவும். எலுமிச்சை பழங்களை அலுமினியம் ஃபாயில்களில் சுற்றி அவற்றை சேமித்து வைக்கலாம். அலுமினியம் ஃபாயிலில் சுற்றி வைக்கும் பொழுது அவற்றில் உள்ள ஈரப்பதம் வெளியேறாமல் தடுக்கப்படுகிறது. இதனால் எலுமிச்சை பழங்கள் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.