ராயப்பேட்டையில் ஒரு தெரு நாய் கடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்து தடுப்பூசி போட்ட பிறகும், ஒருவருக்கு ஒன்றரை மாதத்தில் ரேபிஸ் நோய் பரவியது. இது பொதுமக்களில் தடுப்பூசி பயன்திறன் குறைவா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விசேஷக்குழு மருத்துவர்கள், தடுப்பூசி போட்ட பிறகும் ரேபிஸ் நோய் வர வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், ஊசியின் தரம், Whole chain storageல் சரியான நடைமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் பாதிப்பு ஏற்படக்கூடும். மருத்துவமனையில் தடுப்பூசி போடப்படும் முன், அனைத்து நிலைகளும் சரியாக பரிசோதிக்கப்பட வேண்டும்.

நாய் கடித்த உடனே 12 மணி நேரத்திற்குள், அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் ஊசி போடுவது மிகவும் முக்கியம். இதனால் பிற்காலத்தில் பாதிப்புகளை குறைக்க முடியும். ரேபிஸ் தடுப்பூசி ஒருவருக்கு 4 தடவைகள், சில உடன் நோய்கள் உள்ளவர்களுக்கு 5 தடவைகள் என வழங்கப்படுகிறது. வீட்டில் நாய்களை வளர்ப்பவர்கள், அதிகமாக நாய் கடிக்கப்படும் சூழலில் உள்ளவர்கள், தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
நாய் கடித்தால் உடனே பாதிக்கப்பட்ட பகுதியை சுத்தமான நீரில் கழுவி, உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஊசியை சரியான நேரத்தில் முறையாக எடுத்தால் ரேபிஸ் நோயை 100 சதவீதம் தடுப்பது சாத்தியமாகும். பொதுமக்கள் அச்சம்கொள்ள தேவையில்லை, தடுப்பூசி முறையாக பின்பற்றப்பட்டால் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.