சென்னை: வைட்டமின் டி குறைபாடு நம் எலும்புகளை பலவீனமாக்கி, எலும்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும் என்பது தெரியுங்களா?
குழந்தைகளில், இந்த குறைபாடு ரிக்கெட்ஸ் நோய்க்கு வழிவகுக்கும், மற்றும் பெரியவர்களில், இது எலும்பு வலி மற்றும் இளக்கத்தை ஏற்படுத்தும் எலும்பு நோய்க்கு வழிவகுக்கும்.வைட்டமின் குறைபாடுகளில் மிகமுக்கியமானது டி' வகை குறைபாடு. இந்தியாவில் வைட்டமின்-டி குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம்.
இந்தியன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் பிராக்டிஸ்’ (Indian journal of clinical practice) இதழில் 2014-ம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் தோராயமாக 70 சதவிகித இந்தியர்களுக்கு வைட்டமின்-டி குறைபாடு இருப்பது தெரியவந்தது. போதிய விழிப்புணர்வு இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என்பதும் அந்த ஆய்வில் தெரியவந்தது.
நம்முடைய உடலுக்கு விட்டமின் டி சத்து மிகவும் முக்கியமான ஒன்று . இதன் குறைபாட்டால் நம் உடலில் பல பிரச்சனைகள் உண்டாகின்றன. முக்கியமாக நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, எலும்பு வலுவிழந்து இருப்பது, இரும்பு சத்து குறைவாக இருப்பதற்கும் இந்த விட்டமின் டி போதிய அளவு இல்லாததே காரணம் .
விட்டமின் டி சத்தி அதிக அளவில் உற்பத்தியாகும் இடம் சூரியஒளி .எனவே நாம் தினமும் அதி காலையில் சூரியஒளி படுமாறு நடக்க வேண்டும்.முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி நிரம்பியுள்ளது . சாலமீனில் அதிகமாக விட்டமின் டி சத்து உள்ளது. பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றில் விட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது.
இயற்கையாகவே நமக்கு பாலில் அதிக அளவு விட்டமின் டி சத்துக்கள் மற்றும் அதிக அளவு கால்சியமும் உள்ளது. எனவே தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பது நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்துக்களையும், வைட்டமின் டி சத்துக்களையும் பெற உதவும்.
மீன் எண்ணெயில் அதிக அளவு விட்டமின் டி சத்தும், விட்டமின் ஏ சத்தும் உள்ளது. இது நம் குழந்தைகளுக்கு விட்டமின் குறைபாட்டால் ஏற்பட கூடிய நோயான ரிக்கட்டஸ் வர விடாமல் பார்த்து கொள்ளும்.