ஒருவரின் ஃபாஸ்டிங் பிளட் சுகர் அளவு 100 முதல் 125 mg/dL வரை இருந்தால், அது ப்ரீடயாபடீஸின் அறிகுறியாக கருதப்படுகிறது. இது நீரிழிவை நோக்கிச் செல்லும் ஆரம்ப நிலை என்பதால், இந்த கட்டத்தில் கவனமாக இருந்து வாழ்க்கை முறையை சீரமைப்பது மிக அவசியம். சரியான உணவு, உடற்பயிற்சி, தூக்கம், மனநிலை ஆகியவை கட்டுப்பாட்டில் இருந்தால் நீரிழிவைத் தடுக்க முடியும். குறிப்பாக 114 mg/dL என்ற அளவு, உடனடியாக கவனிக்க வேண்டிய புள்ளியாயிருக்கும்.
இந்த நிலைக்கு வந்துவிட்டவர்கள் உடனடியாக உணவுக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதிகமாக பச்சை காய்கறிகள், முழுதானியங்கள் மற்றும் சிறந்த கொழுப்பு மற்றும் புரதம் கொண்ட உணவுகளை சேர்த்தல் முக்கியம். அதேசமயம் சர்க்கரை கலந்த பானங்கள், அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் மற்றும் பதப்படுத்திய பொருட்கள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். உணவை மெதுவாக நிதானமாக சாப்பிடுவது, உணர்வோடு உண்பது போன்ற பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

உடல்பயிற்சி தவிர்க்க முடியாத ஒன்றாகும். தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் நடக்கும் பழக்கம், வாரத்தில் 150 நிமிடங்கள் உடற் பயிற்சி, அதோடு வாரம் 2 முறை மெல்லிய உடல் வலிமை பயிற்சிகளும் இதில் அடங்கும். உடல் எடையை 5-10% குறைத்தாலே கூட நீரிழிவு அபாயம் குறைவதோடு இன்சுலின் சென்சிட்டிவிட்டியும் மேம்படும். தூக்கத்தின் அளவும், தரமும், அதற்கு இணையாக மன அழுத்தத்தை சமாளிக்கும் முயற்சிகளும் ஒருங்கிணைந்தால் அதிக நன்மை கிடைக்கும்.
முக்கியமாக, அதிக நேரம் அமர்ந்திருப்பதை தவிர்த்து, ஒவ்வொரு மணிநேரமும் சற்றே நடந்துசென்று உடலை இயக்கிக் கொண்டே இருக்க வேண்டும். ப்ரீடயாபடீஸ் நிலை இருக்கும்போது அதை அலட்சியமாக விட்டால், அது நேரடியாக டைப் 2 நீரிழிவுக்கு வழிவகுக்கும். இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற உடனடி மற்றும் நீண்டகால பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், ஆரம்ப கட்டத்திலேயே வாழ்நாள் மாற்றங்கள் மூலம் அதை கட்டுப்படுத்த வேண்டும்.