இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பாஜக புதிய அரசியல் விழிப்புணர்வு திட்டத்தை அறிவித்துள்ளது.
நவம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாஜக எம்.பி.க்கள் மாணவர்களை சந்திக்க உள்ளனர்.
350க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
சம்விதான் திவஸ் நாளில் தொடங்கும் இந்த நிகழ்ச்சி இளைஞர்களுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இளைஞர்களை அணுகும் பாஜகவின் இந்த முயற்சி அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
