சென்னை : 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வந்தவுடன் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு அழைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வலியுறுத்தியுள்ளார்.
100 நாள் வேலையில் 86% பெண்களும், 27% தாழ்த்தப்பட்ட சமுதாயனத்தினரும் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், பயனாளிகளுக்கான ஊதிய நிலுவை ₹2,400 கோடியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு நிதியை விடுவித்ததும் உடனடியாக அவர்களுக்கு அத்தொகை வரவு வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.