ஒடிசா: ஒடிசாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என சட்டசபையில் கோஷம் இட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் சட்டசபையில் இருந்து 12 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கோஷமிட்டனர்.
சபாநாயகர் அவர்களை எச்சரித்தும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளியில் ஈடுபட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இச்சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.