ராஜஸ்தான்: ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் பாஜக அமைச்சர் அவினாஷ் கெலாட் பேசுகையில், இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அமளி நிலவியது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 6 பேரும் பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் இரவு முழுவதும் அங்கேயே தங்குகின்றனர்.