சென்னை: கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சட்டப்பேரவையில் விவாதம் நடத்த வலியுறுத்தி அ.தி.மு.க. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டு அவை முடியும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததைக் கண்டித்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு அ.தி.மு.க. எம்எல்ஏக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு அனுமதி கோரி போலீசில் கடிதம் கொடுத்துள்ளனர்.