புதுடெல்லி: முன்னாள் துணைப் பிரதமர் அத்வானிக்கு வயது 96. சிறுநீரக பாதிப்புக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுநீரகவியல் நிபுணர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்.கே.அத்வானி 1980-ல் பா.ஜ.க ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அதிக காலம் பதவி வகித்த தலைவர். 1990-களில் பா.ஜ.க.வின் எழுச்சிக்கு அத்வானி முக்கியப் பங்காற்றினார்.
பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் துணைப் பிரதமராகப் பணியாற்றிய எல்.கே.அத்வானிக்கு கடந்த பிப்ரவரி மாதம் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது நினைவிருக்கலாம்.