சுல்தான்பூர்: 2018 கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “அமைச்சர் அமித் ஷா கொலை வழக்கில் குற்றவாளி” என்று குற்றம் சாட்டினார். இதை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் விஜய் மிஸ்ரா உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று சுல்தான்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் விஜய் மிஸ்ராவிடம் ராகுல் காந்தியின் வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா குறுக்கு விசாரணை நடத்தினார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் மனுதாரரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்று வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா தெரிவித்தார்.