சென்னை: அ.தி.மு.க. கூட்டணி குறித்து எழும் விமர்சனங்கள் பற்றி யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் அட்வைஸ் அளித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
சமீபகாலமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. பேசுவதாக தகவலை பரப்புகிறார்கள்.
எங்களை பொறுத்தவரை சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் கையாளும் தந்திரங்களையும், வியூகங்களையும் வெளியில் அனைவருக்கும் தெரியும் வகையில் சொல்ல முடியாது என்று கூறி இருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணி குறித்து எழும் விமர்சனங்களுக்கு த.வெ.க. நிர்வாகிகள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தி உள்ளார்.