பெரம்பூர்: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பூசல்கள் உருவானதால் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. தற்போது தினகரன் அணி, சசிகலா அணி என மேலும் நான்காக பிரிந்துள்ளது. மாவட்ட செயலாளர்கள் தொடங்கி பல்வேறு முக்கிய நிர்வாகிகளுக்கு பணத்துக்கு மாற்றாக பொறுப்புகள் வழங்கப்படுவதாக அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதை நிரூபிப்பது போல் பல நிகழ்வுகள் அதிமுகவில் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், வடசென்னையில் பிரிவு செயலாளர் பதவிக்கு ₹25 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாக ஒரு ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கேட்ட அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வடசென்னை வியாசர்பாடி பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இளங்கோ என்ற பிரிவு செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த பதவிக்கு இதுவரை புதிய நபர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், வடசென்னை மாவட்ட பேரவை தலைவர் ஒருவரும், இலக்கிய அணியை சேர்ந்த மற்றொருவரும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், புதிய பிரிவு செயலாளரை நியமிக்க முடியவில்லை என்றும், அதற்கான கட்டணம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் ஒருவர் கூறுகிறார். இன்னொருவர், இப்போது நியமிக்க மாட்டோம், அடுத்த மாதம், மார்கழி மாதத்தில் நியமிப்போம் என்கிறார். மற்றொருவர், 20 லட்சம் முதல் ரூ. 25 லட்சம். திருஞானத்திற்கு அவருக்கு ரூ. 20 லட்சம். இதற்கு மற்றொருவர், கட்சியை விற்கிறோம், கடந்த மூன்று ஆண்டுகளாக விற்கிறோம் என்கிறார். அதுதான் இப்போது வியாபாரம்.
பெண்கள் கூட பணம் வாங்கிக்கொண்டுதான் பதிவிடுகிறார்கள் என்கிறார்கள். கட்சி எவ்வளவு மோசமாகப் போகிறது? இதுதான் கட்சியின் குணம். ஃபேஸ்புக்கில் எல்லாம் போடணுமா? நான் யோசிக்கிறேன். இருவரும் கட்சியை அசிங்கப்படுத்துவதாகவும், ஃபேஸ்புக்கில் போட்டால் சூடு பிடிக்கும் என்றும், புகழாரம் சூட்டுவதாகவும் அந்த ஆடியோ கிளிப்பில் கூறியுள்ளனர். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரிவு செயலாளர் நியமனத்திற்கு ரூ.25 லட்சம் வரை பேரம் பேசுவதாக அதிமுகவினர் ஆடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.